சுடச்சுட

  
  2spt3

  லண்டன், ஆக.1: ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் தோல்வி கண்டு வெளியேறியது இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா ஜோடி.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் பூபதி-போபண்ணா ஜோடி 3-6, 4-6 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரிச்சர்டு காஸ்கட்-ஜூலியன் பென்னட்டா ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. இந்தப் போட்டியின் முதல் செட்டில் ஒரு முறையும், இரண்டாவது செட்டில் இரு முறையும் இந்திய ஜோடியின் சர்வீஸ்களை முறியடித்தது பிரான்ஸ் ஜோடி.

  இரண்டாவது செட்டில் 3 கேம்களின் முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் 4-வது கேமில் போபண்ணா தனது சர்வீûஸ எதிர்ஜோடியிடம் இழக்க சரிவு ஆரம்பமானது. 9-வது கேமில் மீண்டும் போபண்ணாவின் சர்வீûஸ முறியடித்த பிரான்ஸ் ஜோடி 10-வது கேமில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

  முன்னதாக பயஸýடன் ஜோடி சேர்ந்து விளையாட மறுத்த பூபதியும், போபண்ணாவும் இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு நிர்பந்தம் அளித்து மீண்டும் ஜோடி சேர்ந்து ஒலிம்பிக்கில் களமிறங்கினர். இப்போது இரண்டாவது சுற்றிலேயே வெளியேறி இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கிவிட்டனர்.

  40 வயதை நெருங்கிவிட்ட பூபதிக்கு இதுவே கடைசி ஒலிம்பிக்காக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த முறை பயஸýம், பூபதியும் ஜோடி சேர்ந்திருந்தால் பதக்கம் வெல்ல முடியும் என்ற நிலை இருந்தபோதும், கருத்து வேறுபாட்டால் இப்போது பதக்க வாய்ப்பை இழந்துள்ளார் பூபதி. அவருக்கு ஒலிம்பிக் பதக்கம் கடைசி வரை கனவாகவே போய்விட்டது!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai