சுடச்சுட

  

  வேண்டுமென்றே தோற்றதால் 8 பாட்மிண்டன் வீராங்கனைகள் தகுதி நீக்கம்

  Published on : 26th September 2012 11:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2spt9

  லண்டன், ஆக. 1: ஒலிம்பிக்கில் இருந்து 8 பாட்மிண்டன் வீராங்கனைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலிறுதிச் சுற்றில் எளிதாக வெற்றிபெறும் நோக்கில் லீக் சுற்றில் வேண்டுமென்றே இந்த வீராங்கனைகள் எதிர்ஜோடியிடம் தோற்றுள்ளனர்.

  இவர்களில் 4 பேர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள், இருவர் சீனாவையும், மற்ற இருவர் இந்தோனேஷியாவையும் சேர்ந்தவர்கள்.

  மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற இந்த வீராங்கனைகள் தோல்வியடைய வேண்டுமென்ற நோக்கில் விளையாடியுள்ளனர். வேண்டுமென்றே நெட்டில் அடித்து தங்களின் சர்வீஸ்களை இழந்துள்ளனர். போட்டியைக் காணக் கூடியிருந்த ரசிகர்களே இதனை உணர்ந்து கொண்டு வீராங்கனைகளை கேலி செய்து குரல் எழுப்பினர்.

  முக்கியமாக குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த முன்னணி சீன வீராங்கனைகள் யூ யாங், வாங் சியோலி ஆகியோர் முதல் இரு ஆட்டங்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்று விட்டனர்.

  இந்நிலையில் தங்களது 3-வது ஆட்டத்தில் தென் கொரியாவின் ஜூங் கியாங் - கிம் ஹா நா இணையை எதிர்கொண்டது. தரவரிசையிலேயே இடம்பெறாத தென் கொரிய ஜோடியிடம், சீன வீராங்கனைகள் வேண்டுமென்றே தோல்வியடைந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

  இந்த ஆட்டத்தில் வென்றால் தங்கள் நாட்டைச் சேர்ந்த மற்றொரு முன்னணி ஜோடியை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதாலேயே சீன வீராங்கனைகள் திட்டமிட்டு தோற்றுள்ளனர்.

  போட்டிக்குப் பின் இது தொடர்பாகப் பேசிய சீன வீராங்கனை யூ, "நாங்கள் ஏற்கெனவே காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டோம்.

  பின்னர் ஏன் கஷ்டப்பட்டு விளையாடி, சக்தியை வீணடிக்க வேண்டும். அடுத்த சுற்றில் சிறப்பாக விளையாடுவோம்' என்றார்.

  இதையடுத்து அந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வீராங்கனைகள் பங்கேற்ற ஆட்டங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இதில் அவர்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி விளையாடவில்லை, வேண்டுமென்ற மோசமாக விளையாடியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளின் பாட்மிண்டன் சங்கமும் விசாரணை நடத்தி வீராங்கனைகள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai