சுடச்சுட

  
  3spt8

  லண்டன், ஆக. 2: லண்டன் ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் சாய்னா நெவால்.

  வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் டென்மார்க் வீராங்கனை டின்னி பெüனை எதிர் கொண்டார் சாய்னா. இதில் 21-15, 22-20 என்ற நேர் செட்களில் சாய்னா வென்றார். முதல் செட்டை 16 நிமிடங்களிலும், இரண்டாவது செட்டை 21 நிமிடங்களிலும் சாய்னா முடிவுக்குக் கொண்டு வந்தார். தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சாய்னாவுக்கு அரையிறுதிச் சுற்று மிகுந்த சவாலாக இருக்கும். ஏனெனில் முதல்நிலை வீராங்கனையான சீனாவின் இகன் வாங்கை சந்திக்கிறார் சாய்னா. முதல்முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் சாய்னா.

  முன்னதாக புதன்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா 21-14, 21-16 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ஜீ யாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக் கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai