சுடச்சுட

    

    புது தில்லி, ஆக. 2: இந்தியாவில் தேசிய விளையாட்டு என்ற அந்தஸ்து எந்த விளையாட்டுக்கும் அளிக்கப்படவில்லை என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.

    நமது நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று நாம் அனைவரும் கூறி வரும் நிலையில், நாட்டின் தேசிய விளையாட்டு என்ற அந்தஸ்து எந்த விளையாட்டுக்கும் அளிக்கப்படவில்லை என மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்திய அரசு இணையதளமான ஜ்ஜ்ஜ்.ண்ய்க்ண்ஹ.ஞ்ர்ஸ்.ண்ய்-ல் இந்திய தேசிய விளையாட்டு என்ற தûலைப்பில் ஹாக்கி குறிப்பிடப்பட்டு, ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் லக்னெüவைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஐஸ்வர்யா பிரஷார் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் இந்தியாவின் தேசிய கீதம், விளையாட்டு, விலங்கு, மைதானம், மலர், தேசிய சின்னம் ஆகியவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் நகல்களை அளிக்க வேண்டுமென கோரியிருந்தார்.

    இந்த மனு பிரதமர் அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.

    உள்துறை அமைச்சகம் தேசிய விளையாட்டு தொடர்பான விசாரணையை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.

    இந்நிலையில் விளையாட்டு அமைச்சக செயலாளர் சிவ பிரதாப் சிங், ஐஸ்வர்யாவுக்கு இது தொடர்பாக பதில் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், "இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று எதையும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

    இந்திய அரசு இணையதளத்தில் தேசிய விளையாட்டு என்ற பெயரில் ஹாக்கி இடம் பெற்றுள்ள நிலையில், நமது நாட்டுக்கு தேசிய விளையாட்டு என்று எதுவும் கிடையாது என்று விளையாட்டு அமைச்சகம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai