சுடச்சுட

  
  3spt2

  பெய்ஜிங், ஆக. 2: ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இனி பாட்மிண்டன் விளையாடப் போவதில்லை என்று சீன வீராங்கனை யூ யாங் தெரிவித்துள்ளார். அவர் சீனாவின் நட்சத்திர வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

  இது தொடர்பாக இணையதள வலைப்பூவில் அவர் கூறியிருப்பது: இந்த ஒலிம்பிக் போட்டி எனக்கு கடைசிப் போட்டியாக அமைந்துவிட்டது.

  சர்வதேச பாட்மிண்டன் சங்கத்திடம் இருந்தும், எனது விருப்பத்துக்குரிய பாட்மிண்டன் விளையாட்டில் இருந்தும் இத்துடன் விடைபெற்றுக் கொள்கிறேன்.

  நீங்கள் இரக்கமற்ற வகையில் எங்கள் கனவுகளை சாகடித்து விட்டீர்கள். இதனை எப்போதும் மறக்க முடியாது என்று சர்வதேச பாட்மிண்டன் சங்கத்தின் மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார். யூ யாங்கின் இந்த முடிவு "அகங்காரத் துறவு' என சீன பாட்மிண்டன் ரசிகர்கள் வர்ணித்துள்ளனர்.

  26 வயதாகும் யூ யாங், வாங் சியோலியுடன் இணைந்து ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் பாட்மிண்டனில் பங்கேற்றார்.

  தனது கடைசி லீக் ஆட்டத்தில் இவர்கள், தென் கொரிய ஜோடியிடம் வேண்டுமென்றே தோல்வியடைந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

  இவர்கள் தவிர தென்கொரியாவைச் சேர்ந்த 4 வீராங்கனைகளும், இந்தோனேசியாவைச் சேர்ந்த இரு வீராங்கனைகளும் இதே குற்றச்சாட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதே நேரத்தில் தங்கள் நாட்டு வீராங்கனைகள் நீக்கப்பட்டதை சீன ஒலிம்பிக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது.

  தங்கள் நாட்டு வீராங்கனைகளின் செய்கை தங்கள் மனதைப் புண்படுத்தி விட்டது. அவர்கள் மீது சர்வதேச பாட்மிண்டன் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று சீன அரசின் செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளது.

  ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 8 வீராங்கனைகள் மீதும் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai