சுடச்சுட

  
  3spt4

  லண்டன், ஆக.2: ஒலிம்பிக் டபுள் டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ரஞ்சன் சோதி தகுதிச் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

  இந்த முறை நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஞ்சன் சோதி, தகுதிச் சுற்றோடு வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் சுற்றில் 50-க்கு 48 புள்ளிகளைப் பெற்ற சோதி, அடுத்த இரு சுற்றுகளிலும் பின்னடைவை சந்தித்தார். 2 மற்றும் 3-வது சுற்றுகளில் முறையே 44 மற்றும் 42 புள்ளிகளையே அவர் பெற்றார்.

  மூன்று சுற்றுகளையும் சேர்த்து 150-க்கு 134 புள்ளிகளை மட்டுமே பெற்ற சோதி 11-வது இடத்தையே பிடித்தார். இதனால் அவரால் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. 24 பேர் பங்கேற்ற இப்போட்டியில் முதல் 6 இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai