சுடச்சுட

  
  4spt4

  லண்டன், ஆக.3: ஒலிம்பிக் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா-அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மோதுகின்றனர். இதன்மூலம் இவர்கள் இருவரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

  வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் ஷரபோவா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் சக நாட்டு வீராங்கனையான மரியா கிரிலென்கோவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் பெலாரஸின் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விக்டோரியா அசெரன்காவும், கிரிலென்கோவும் மோதவுள்ளனர்.

  போராடி வென்ற ஃபெடரர்: ஆடவர் பிரிவு ஒற்றையர் அரையிறுதியில் முதல்நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3-6, 7-6 (5), 19-17 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் ஜுவன் மார்டினை போராடி வென்றார். இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் ஃபெடரர். இவர்கள் இருவரிடையிலான இந்த ஆட்டம் 4 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தது. இந்த ஆட்டத்தில் கிடைத்த 13 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளில் இரண்டை மட்டுமே தன்வசமாக்கினார் ஃபெடரர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai