சுடச்சுட

  
  4spt7

  லண்டன், ஆக.3: ஒலிம்பிக் 75 கிலோ மிடில் வெயிட் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் விஜேந்தர் சிங்.

  வியாழக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கடுமையாகப் போராடிய விஜேந்தர் சிங், ஒரு புள்ளி வித்தியாசத்தில் "த்ரில்' வெற்றி கண்டார். கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான விஜேந்தர் சிங், 16-15 என்ற கணக்கில் அமெரிக்காவின் டெரில் கெüசாவை வீழ்த்தினார்.

  இருவருமே ஆரம்பம் முதலே அபாரமாக ஆடினர். இருப்பினும் முதல் சுற்றின் முடிவில் விஜேந்தர் ஒரு புள்ளி முன்னிலை பெற்றார். பின்னர் நடைபெற்ற 2-வது சுற்றில் விஜேந்தருக்கு கடுமையான சவால் அளித்தார் கெüசா. இதனால் இரண்டாவது சுற்றின் முடிவில் இருவரும் 5-5 என்ற கணக்கில் சமநிலையை எட்டினர்.

  இதையடுத்து மூன்றாவது மற்றும் 4-வது சுற்றுகளில் இருவருமே மாறிமாறி தாக்குதல் ஆட்டத்தைக் கையாண்டனர். எனினும் விஜேந்தர் 16-15 என்ற கணக்கில் வெற்றி கண்டார்.

  விஜேந்தர் தனது காலிறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் அப்பாஸ் அடோவை சந்திக்கிறார். அரையிறுதிக்கு முன்னேறும்பட்சத்தில் விஜேந்தர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துவிடுவார்.

  இந்த ஆட்டத்தில் விஜேந்தர் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. 2010-ல் சீனாவின் குவாங்ஜெü நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிச்சுற்றில் விஜேந்தர் 7-0 என்ற கணக்கில் அப்பாûஸ வீழ்த்தினார். இந்தப் போட்டியின்போது விஜேந்தருக்கு கையில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அதைப் பொருட்படுத்தாது விளையாடி வெற்றி கண்டார் விஜேந்தர்.

  டெரில் மீது ஆக்ரோஷமாக தாக்குதல் தொடுக்கும் விஜேந்தர் சிங் (வலது).

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai