சுடச்சுட

  

  பல்லகெலே, ஆக. 3: இலங்கைக்கு எதிராக "ஹாட்ரிக்' வெற்றி பெரும் முனைப்பில் 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகிறது தோனி தலைமையிலான இந்திய அணி.

  இத்தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற 4 போட்டிகளில் மூன்றில் வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் 5-வது, கடைசி ஒருநாள் கிரிக்கெட் பல்லகெலேவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

  இந்த ஆட்டத்தில் இந்தியா வென்றால் இந்த ஒருநாள் தொடரில் தொடர்ந்து 3-வது வெற்றியைப் பெறும். இத்தொடர் முழுவதுமே இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. முக்கியமாக விராட் கோலி சிறப்பாக விளையாடி இத் தொடரில் இரு சதங்களை எடுத்துள்ளார். ரெய்னா 3 அரைசதங்களை விளாசினார். இவர்கள் தவிர தொடக்க வீரர்கள் சேவாக், கம்பீர் ஆகியோரின் பேட்டிங்கும் சிறப்பாக உள்ளது. எனவே கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் பேட்டிங் சிறப்பாக அமைந்தால் இந்தியாவின் வெற்றியைத் தடுக்க முடியாது.

  அதே நேரத்தில் தொடரை இழந்துவிட்டாலும், கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கத்துடன் இலங்கை வீரர்கள் களமிறங்குவர். இத்தொடரில் பல கேட்ச்சுகளை கோட்டைவிட்டதே இலங்கை அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai