சுடச்சுட

  
  4spt3

  லண்டன், ஆக.3: ஒலிம்பிக் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் சிங் தகுதிச்சுற்றிலேயே தோல்வியடைந்தார்.

  வியாழக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் ஏ, பி ஆகிய இரு பிரிவுகளிலிருந்தும் மொத்தம் 40 பேர் பங்கேற்றனர். இதில் முதல் முயற்சியில் 19.40 மீ. தூரம் குண்டு எறிந்த ஓம் பிரகாஷ், அதிகபட்சமாக 19.86 மீ. தூரம் வரை குண்டு எறிந்தார். அவரின் மூன்றாவது முயற்சி "ஃபெüல்' ஆனது. இதனால் "பி' பிரிவில் இடம்பெற்றிருந்த ஓம் பிரகாஷ், அப் பிரிவில் 10-வது இடத்தையும், ஒட்டு மொத்தமாக 19-வது இடத்தையும் பிடித்தார்.

  முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரகாஷ், தனது தேசிய சாதனையைக்கூட (20.60 மீ. தூரம் குண்டுவீசியது) தொடவில்லை. தகுதிச்சுற்றில் அமெரிக்காவின் ரீஸ் ஹோஃபா 21.36 மீ. தூரம் குண்டுவீசி முதலிடத்தையும், ஜெர்மனியின் டேவிட் ஸ்டோர்ல் 21.15 மீ. தூரம் குண்டுவீசி 2-வது இடத்தையும் பிடித்தனர். மொத்தம் 12 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai