சுடச்சுட

  
  4spt6

  லண்டன், ஆக.3: ஒலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.

  வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சாய்னா 13-21, 13-21 என்ற நேர் செட்களில் முதல் நிலை வீராங்கனையான சீனாவின் இகான் வாங்கிடம் தோல்வி கண்டார்.

  42 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இகான் வாங்குக்கு எதிராக சாய்னாவால் ஒருபோதும் முன்னிலை பெற முடியவில்லை. இதனால் ஆட்டத்தில் ஒரு சர்வீஸ் மட்டுமே அதிகபட்சமாக 38 விநாடிகள் நீடித்தது. மற்ற சர்வீஸ்கள் அனைத்துமே சராசரியாக 10 விநாடிகளில் முடிவுக்கு வந்தன.

  வெண்கலம் வெல்வாரா? இருப்பினும் சாய்னாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மற்றொரு அரையிறுதியில் தோல்வி கண்ட சீன வீராங்கனை ஜிங் வாங்குடன் மோதுகிறார் சாய்னா.

  இறுதி ஆட்டத்தில் சீனாவின் இகான் வாங், சகநாட்டு வீராங்கனை லீ ஸியூரூயியுடன் மோதுகிறார். ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதி வரை முன்னேறிய ஒரே இந்திய வீராங்கனை சாய்னா மட்டுமே.

  தோல்விக்குப் பிறகு சாய்னா கூறுகையில், "இகான் வாங் என்னைவிட அதிவேகமாக சர்வீஸ்களை அடித்தார். நான் சரியாக செயல்படவில்லை. அதை இகான் வாங் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். முக்கியமான கட்டங்களில் நான் சில தவறுகளை செய்தேன். அது எனக்குப் பாதகமாக அமைந்துவிட்டது.

  சில கட்டங்களில் கடுமையாகப் போராடியபோதும், அதை இகான் வாங் தகர்த்துவிட்டார். அவரைப் போன்று நான் சிறப்பாக விளையாடவில்லை' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai