சுடச்சுட

  
  4spt9

  பெங்களூர், ஆக. 3: ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய அணியுடன் இணைந்து வலம் வந்த மதுரா ஹனி தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

  பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பாகக் கூறியது: ஒலிம்பிக் அணி வகுப்பில் இந்திய அணியுடன் சேர்ந்து நடந்து சென்றது எனது தவறுதான். எனது நடவடிக்கை பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

  உரிய அனுமதியுடன், அனைத்து பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின்னர்தான் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டேன். தொடக்கவிழாவில் நடன நிகழ்ச்சி ஒன்றில் நான் பங்கேற்றேன். இந்தியா அதிக போட்டிகளில் வெல்ல வேண்டுமென்ற ஆர்வம் எனக்கும் உள்ளது. எனினும் எனது செய்கை இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. இதற்காக என்னை மறைத்துக் கொள்ள வேண்டுமென்றும் விரும்பவில்லை' என்றார் அவர்.

  முன்னதாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் தொடக்கவிழா அணிவகுப்பில் சுஷில் குமார் தலைமையில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அப்போது இந்திய அணிக்குச் சம்பந்தமில்லாத மதுரா ஹனியும் அணிவகுப்பில் பங்கேற்றார். அப்போது அவர் யார் என்பதும் தெரியாமல் இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் குழு சார்பில் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai