சுடச்சுட

  

  லண்டன், ஆக. 3: ஒலிம்பிக்கில் 50 மீட்டர் ரைபிள் புரோன் துப்பாக்கி சுடுதலில் 1.9 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவற விட்டார் இந்தியாவின் ஜாய்தீப் கர்மாகர்.

  இதே பிரிவில் இந்தியாவின் ககன் நரங் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. அவர் ஏற்கெனவே 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.

  அதே நேரத்தில் 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் பிரிவில் இறுதிச் சுற்று முன்னேறிய கர்மாகரால் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவர் 699.1 புள்ளிகள் பெற்றார்.

  இதே பிரிவில் வெண்கலம் வென்ற ஸ்லோவேனியாவின் ராஜ்மந்த் 701.0 புள்ளிகளை எடுத்தார். இதனால் 1.9 என்ற சிறிய வித்தியாசத்தில் கர்மாகர் பதக்கத்தை நழுவிவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai