சுடச்சுட

  
  4spt2

  லண்டன், ஆக.3: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் 30 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார் விஜய் குமார்.

  இதே பிரிவில் கியூபாவின் லியூரிஸ் பபோ 34 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், சீனாவின் டிங் ஃபெங் 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 2-வது பதக்கம் இது. முன்னதாக 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ககன் நரங் வெண்கலம் வென்றார்.

  ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த 4-வது பதக்கம் இது. முன்னதாக 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளியும், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபிநவ் பிந்த்ரா தங்கமும் வென்றனர்.

  தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்றுள்ளார் விஜய் குமார். பெரிய அளவில் இவர் மீது எதிர்பார்ப்பு இல்லையென்றாலும், சிறப்பாக விளையாடி வெள்ளி வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் ராணுவத்தில் சுபேதாராக பணிபுரிந்து வருகிறார். 2010 தில்லி காமன்வெல்த் போட்டியில் விஜய் குமார் இரு தங்கப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

  ரூ. 1 கோடி பரிசு

  வெள்ளி வென்ற விஜய் குமாருக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று இமாசலப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

  இதுதவிர இமாசலப் பிரதேச கெளரவ விருதுக்கு விஜய் குமாரின் பெயர் பரிந்துரைக்கப்படும் என்று அம் மாநில முதல்வர் பிரேம் குமார் துமல் அறிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai