சுடச்சுட

    
    5spt2

    லண்டன், ஆக.4: ஒலிம்பிக் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தங்கம் வென்றார். ரஷியாவின் ஷரபோவாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் செரீனா 6-0, 6-1 என்ற நேர் செட்களில் மரியா ஷரபோவாவை வீழ்த்தினார்.

    இந்தப் போட்டியில் செரீனாவின் அதிரடிக்கு முன்பு ஷரபோவாவின் ஆட்டம் எடுபடவில்லை. முதல் செட்டில் தனது 3 சர்வீஸ்களையும் தன்வசமாக்கியதோடு, ஷரபோவாவின் 3 சர்வீஸ்களையும் முறியடித்து முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    பின்னர் நடைபெற்ற 2-வது செட்டிலும் அபாரமாக ஆடிய செரீனா 6-1 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி ஷரபோவாவை வீழ்த்தினார். செரீனா ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இரட்டையர் பிரிவில் இரு முறை தங்கம் வென்றுள்ளார். இதேபோல் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அவர் 14 பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அசரென்காவுக்கு வெண்கலம்: வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் மரியா கிரிலென்கோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai