சுடச்சுட

  

  லண்டன், ஆக. 4: ஒலிம்பிக் மகளிர் டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்தார் இந்தியாவின் சாஹன் செüத்ரி.

  சனிக்கிழமை நடைபெற்ற 3 ரவுண்டுகள் கொண்ட தகுதிச்சுற்றின் முதல் ரவுண்டில் சிறப்பாக செயல்பட்ட செüத்ரி 25-க்கு 23 புள்ளிகள் பெற்றார்.

  ஆனால் 2-வது ரவுண்டில் 17 புள்ளிகளை மட்டுமே அவர் பெற்றார். இது அவருக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. 3-வது சுற்றில் அவர் 21 புள்ளிகளைப் பெற்றாலும், அது இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதற்கு போதுமானதாக இல்லை. ஒட்டுமொத்தமாக 61 புள்ளிகளைப் பெற்ற சாஹன் செüத்ரி, 22 பேர் பங்கேற்ற இந்த சுற்றில் 20-வது இடத்தையே பிடித்தார்.

  தகுதிச்சுற்றில் இத்தாலியின் ஜெஸிகா ரோஸி 75-க்கு 75 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் சுஸான்னே 72 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார்.

  ஒலிம்பிக் டபுள் டிராப் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை சாஹன் செüத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai