சுடச்சுட

    
    5spt9

    லண்டன், ஆக. 4: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸின் சாதனை தொடர்கிறது.

    சனிக்கிழமை நடைபெற்ற 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் அவர் தங்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் 17 தங்கப் பதக்கம் வென்ற ஒரே நபர் என்ற சாதனையை எட்டியுள்ளார். 3 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று ஒட்டுமொத்தமாக 21 பதக்கங்களை அவர் வென்றுள்ளார். இதுவும் இதுவரை எவரும் எட்டாத சாதனையாகும்.

    முன்னதாக சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லாரிசா லத்தினா ஒட்டுமொத்தமாக 18 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது. 48 ஆண்டு காலமாக நீடித்த அந்த சாதனையை கடந்த செவ்வாய்க்கிழமை, 19-வது பதக்கத்தை வென்றதன் மூலம் பெல்ப்ஸ் முறியடித்தார். இப்போது கூடுதலாக மேலும் இரு பதக்கங்களை வென்று புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai