சுடச்சுட

  

  லண்டன், ஆக. 4: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஷ் கிருஷன் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் தோல்வியடைந்ததாக முடிவு மாற்றப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

  இது குறித்த விவரம்: ஒலிம்பிக் குத்துச்சண்டையில் 69 கிலோ எடைப்பிரிவில் 20 வயது வீரர் விகாஷ் கிருஷன் அமெரிக்காவின் இரோல் ஸ்பென்ûஸ வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார். காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமான இதில் 13-11 என்ற புள்ளிகள் கணக்கில் விகாஷ் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று அமெரிக்க வீரர் தரப்பில் இருந்து சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு உடனடியாக கோரிக்கை வைக்கப்பட்டது. மறுபரிசீலனையில் விகாஷ் செய்த சில தவறுகளை போட்டி நடுவர் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அமெரிக்க வீரர் இரோல் ஸ்பென்ஸýக்கு கூடுதலாக 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.

  இதையடுத்து 15-13 என்ற புள்ளிக் கணக்கில் இரோல் ஸ்பென்ஸ் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் காலிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை விகாஷ் இழந்தார்.

  முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தோல்வி என்று முடிவு மாற்றப்பட்டது விகாஷ் மட்டுமின்றி இந்தியத் தரப்பில் அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இந்நிலையில் விகாஷ் தோற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இதனை சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் நிராகரித்து விட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai