சுடச்சுட

  
  5spt3

  புது தில்லி, ஆக.4: 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீரர் விஜய் குமாருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சச்சின் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

  "ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக இரண்டாவது பதக்கத்தை வென்று விஜய் குமார் பெருமை சேர்த்துள்ளார்' என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

  விஜய் குமாருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முன்னாள் தட கள வீரரான மில்கா சிங், "ககன் நரங்குக்கு அடுத்தபடியாக இப்போது விஜய் குமார் பதக்கம் வென்றிருப்பது நம் அனைவரையும் பெருமையடைச் செய்துள்ளது. ராணுவ பின்னணி விஜய் குமாருக்கு துப்பாக்கி சுடுதலில் சிறப்பாக செயல்பட உதவியுள்ளது.

  எனவே இந்தியாவுக்கு பதக்கம் பெற்று தந்த பெருமை ராணுவத்தையே சேரும். நான் விளையாடிய காலத்தில் ராணுவத்தில் இருந்ததால் அது எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது. ஒலிம்பிக் சாம்பியன்களை உருவாக்கியதில் ராணுவத்தின் பங்கு அளப்பரியது என்று நம்புகிறேன்' என கூறியுள்ளார்.

  சச்சின் தனது வாழ்த்துச் செய்தியில், "விஜய் குமாரின் சாதனை ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்துள்ளதாக' குறிப்பிட்டுள்ளார். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரும், விஜய் குமாருக்கு தனது வாழ்த்துகளையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai