சுடச்சுட

  
  5spt11

  லண்டன், ஆக.4: ஒலிம்பிக் மகளிர் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுதா சிங் தோல்வி கண்டார்.

  சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் சுதா சிங் 9 நிமிடம், 48 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். 15 பேர் பங்கேற்ற இப்போட்டியில் சுதா சிங்கால் 13-வது இடத்தைய பிடிக்க முடிந்தது. இதனால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அவர் இழந்தார்.

  தகுதிச்சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். ஜெர்மனியின் ஜெஸா பெலிசிட்டாஸ் (9 நிமிடம், 24 விநாடி) முதலிடத்தையும், எத்தியோப்பியாவின் இடினீஷ் திரோ (9 நிமிடம், 25 விநாடி) 2-வது இடத்தையும், கென்யாவின் செமோஸ் சீவ்யா (9 நிமிடம், 27 விநாடி, 09 மைக்ரோ விநாடி) 3-வது இடத்தையும், லாத்வியாவின் பொலினா ஜெலிஸரோவா (9 நிமிடம் 27 விநாடி, 21 மைக்ரோ விநாடி) 4-வது இடத்தையும் பிடித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai