சுடச்சுட

  
  6spt6

  லண்டன், ஆக.5: ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி தங்கம் வென்றது.

  சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றில் பிரையன் சகோதரர்கள் 6-4, 7-6 (2) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜோ-வில்பிரைட் சோங்கா-மைக்கேல் லோட்ரா ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதல் செட்டின் முதல் கேமிலேயே பிரான்ஸ் ஜோடியின் சர்வீûஸ முறியடித்த பிரையன் சகோதரர்கள், 10-வது கேமில் முதல் செட்டை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்த செட்டை அவர்கள் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினர்.

  பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் பிரான்ஸ் ஜோடி கடுமையாகப் போராடியதால் இந்த செட் 6-6 என்ற கணக்கில் சமநிலையில் முடியவே, ஆட்டம் டை பிரேக்கருக்கு சென்றது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிரையன் சகோதரர்கள் 7-2 என்ற கணக்கில் வென்றனர். இதன்மூலம் அவர்கள் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

  பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிரையன் சகோதரர்கள், இந்த முறை தங்கம் வென்றுள்ளனர். இவர்கள் தங்கம் வெல்வது இதுதான் முதல்முறை. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இந்த ஜோடி காலிறுதி வரை முன்னேறியது.

  காஸ்கட்-பென்னாட்டாவுக்கு வெண்கலம்: வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸின் ரிச்சர்டு காஸ்கட்-ஜூலியன் பென்னட்டா ஜோடி 7-6, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர்-ஃபெலிஸியானோ லோபஸ் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai