சுடச்சுட

  
  6spt3

  துபை, ஆக.5: ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

  ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

  முன்னதாக தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த விராட் கோலி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 296 ரன்கள் குவித்ததன் மூலம் இப்போது 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதான் அவரின் அதிகபட்ச தரவரிசையாகும்.

  தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லாவுக்கும், கோலிக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 13 மட்டுமே. வரும் 24-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆம்லா சிறப்பாக விளையாட தவறும்பட்சத்தில் கோலி முதலிடத்தை எட்டிவிடுவார்.

  3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் உள்ளார். இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி 5-வது இடத்தில் உள்ளார். இலங்கைத் தொடரில் 258 ரன்கள் குவித்த கம்பீர் 7 இடங்கள் முன்னேறி இப்போது 10-வது இடத்தைப் பிடித்தார். இவர்களைத் தவிர வேறு எந்த இந்திய வீரர்களும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை.

  பெüலர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் எவ்வித மாற்றமும் இல்லை. முதல் இருபது இடங்களுக்குள் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. தென் ஆப்பிரிக்காவின் சோட்சோபி, பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், சயீத் அஜ்மல் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai