சுடச்சுட

  

  கொழும்பு, ஆக.5: இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டத்தில் பந்துவீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  கேப்டன் மேத்யூஸýக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பல்லகெலேவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை 45.4 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, தரவரிசையிலும் 2-வது இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

  இந்திய அணி அடுத்து இலங்கைக்கு எதிராக ஒரு 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்த ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai