சுடச்சுட

    
    6spt2

    லண்டன், ஆக.5: ஒலிம்பிக் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கிருஷ்ணா பூனியா 7-வது இடத்தைப் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

    சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் வட்டு எறிதல் இறுதிச்சுற்றில் கிருஷ்ணா பூனியா உள்பட மொத்தம் 12 பேர் கலந்து கொண்டனர். இதில் குரோஷியாவின் சந்த்ரா பெர்கோவிக் 69.11 மீ. தூரம் வட்டு எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் அவர் தேசிய சாதனையும் படைத்தார். ரஷியாவின் டார்யா பிஷ்சால்னிகோவா 67.56 மீ. தூரம் வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், சீனாவின் யாங்ஃபெங் லீ 67.22 மீ. தூரம் வட்டு எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 63.62 மீ. தூரம் வட்டு எறிந்த கிருஷ்ண பூனியாவால் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. 35 வயதாகும் கிருஷ்ணா பூனியாவுக்கு இதுவே கடைசி ஒலிம்பிக்காகும்.

    மகளிர் வட்டு எறிதல் பிரிவில் ஜெர்மனியின் கார்பிரில்லே ரெய்ன்ஸ்ச் 76.80 மீ. எறிந்ததே இதுவரை உலக சாதனையாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai