சுடச்சுட

  

  லண்டன், ஆக. 5: விகாஸ் கிருஷன் விவகாரத்தில் ஸ்விட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான மத்தியஸ்த நீதிமன்றத்தை (சிஏஎஸ்) நாடியுள்ளது இந்தியா.

  ஒலிம்பிக் 69 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷனும், அமெரிக்காவின் இரோல் ஸ்பென்ஸýம் மோதினர். ஆட்டத்தின் முடிவில் 13-11 என்ற கணக்கில் விகாஸ் கிருஷன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

  ஆனால் போட்டியின்போது விகாஸ் செய்த சில தவறுகளை நடுவர் கணக்கில் எடுக்கவில்லை என்று அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரோலுக்கு மேலும் 4 புள்ளிகள் வழங்கப்பட்டு அவர் 15-13 என்ற கணக்கில் வெற்றி கண்டதாக அறிவிக்கப்பட்டது.

  இதனால் அதிர்ச்சியடைந்த இந்தியா, சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்திடம் (ஏஐபிஏ) மேல்முறையீடு செய்தது. ஆனால் இந்தியாவின் கோரிக்கையை ஏஐபிஏ நிராகரித்துவிட்டது.

  இதையடுத்து ஏஐபிஏவின் முடிவை எதிர்த்து ஸ்விட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான மத்தியஸ்த நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் சனிக்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது.

  இதுதொடர்பாக ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய விளையாட்டுக் குழு தலைவர் (பொறுப்பு) முரளிதரன் ராஜா கூறுகையில், "விகாஸýக்கு எதிராக ஏஐபிஏ முடிவை மாற்றி அறிவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக சிஏஎஸ் பொதுச் செயலர் மேத்யூ ரீபுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு முடிவு மாற்றி அறிவிக்கப்பட்டது.

  அதேநேரத்தில் ஸ்பென்ஸ் 2 மற்றும் 4-வது சுற்றுகளில் தவறு செய்தார் என்ற இந்தியத் தரப்பு நிலைப்பாட்டை ஏஐபிஏ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளோம். 69 கிலோ எடை காலிறுதிப் போட்டிக்கான எடை சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai