சுடச்சுட

  
  6spt4

  லண்டன், ஆக.5: அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 400 மீ. மெட்லி தொடர் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற கையோடு நீச்சலில் இருந்து ஓய்வுபெற்றார்.

  சனிக்கிழமை இரவு நடைபெற்ற இப் போட்டியில் மட் கிரீவர்ஸ், பிரென்டன் ஹன்சென், மைக்கேல் பெல்ப்ஸ், அட்ரியான் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி 29.35 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

  தனது கடைசிப் போட்டியில் தங்கம் வென்ற கையோடு ஓய்வு முடிவையும் அறிவித்த 27 வயது பெல்ப்ஸ், "நான் விரும்பும் எதையும் என்னால் சாதிக்க முடியும்' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

  "நீச்சல் குளம் மற்றும் ஹோட்டல் அறைகளை விட்டுவிட்டு, இனி வரும் நாள்களில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல விரும்புகிறேன்' என்றார். தனது பயிற்சியாளர் பாப் பெüமான் குறித்துப் பேசிய பெல்ப்ஸ், "அவர் இல்லாமல் நான் இங்கு வந்திருக்க முடியாது. சாதித்திருக்கவும் முடியாது. சாகும்வரை அவரை மறக்கமாட்டேன்' என்றார்.

  2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக பங்கேற்ற அவர், அதில் 6 தங்கம், 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றார். அதைத்தொடர்ந்து 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தான் பங்கேற்ற 8 பிரிவுகளிலும் தங்கம் வென்று ஒரே ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார்.

  இந்த ஒலிம்பிக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4 ஷ் 200 மீ. ப்ரீஸ்டைல் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்கள் (19 பதக்கங்கள்) வென்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரனார்.

  முன்னதாக சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லாரிசா லத்தினா ஒட்டுமொத்தமாக 18 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது. 48 ஆண்டு காலமாக நீடித்த அந்த சாதனையை 19-வது பதக்கத்தை வென்றதன் மூலம் பெல்ப்ஸ் முறியடித்தார்.

  இந்த நிலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற 400 மீ. மெட்லி தொடர் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று நீச்சலுக்கு விடை கொடுத்திருக்கிறார் பெல்ப்ஸ்.

  இந்த ஒலிம்பிக் போட்டியில் மட்டும் அவர் 4 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 22 பதக்கங்களை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பெல்ப்ஸ். இதில் 18 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

  ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வென்றவர் மட்டுமல்ல, அதிக தங்கப் பதக்கங்கள் வென்றவர், தனி நபர் பிரிவில் அதிக தங்கப் பதக்கங்கள் (11) வென்றவர் போன்ற சாதனைகளும் தங்க மகன் பெல்ப்ஸ் வசமே உள்ளது. ஒலிம்பிக்கில் மட்டுமல்லாது, உலக சாம்பியன்ஷிப், பான் பசிபிக் சாம்பியன்ஷிப், அமெரிக்க சாம்பியன்ஷிப் என ஏராளமான போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளதோடு, உலக சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார் பெல்ப்ஸ்.

  16 பதக்கங்கள் வென்ற லாரிஸôவின் சாதனையை 48 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்த இந்த பெல்ப்ஸின் சாதனையை முறியடிப்பது யாரோ? அது சாத்தியமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்!

  22 பதக்கங்கள்

  18 தங்கம்

  2 வெள்ளி

  2 வெண்கலம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai