சுடச்சுட

  

  லண்டன், ஆக.5: ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்தியா 1-4 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி கண்டது.

  இதன்மூலம் தொடர்ச்சியாக 4-வது தோல்வியைச் சந்தித்துள்ளது இந்தியா. சனிக்கிழமை நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் தென் கொரியா கோலடித்தது. 10-வது நிமிடத்தில் இந்தியா கோலடிக்க 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. இதன்பிறகு முதல் பாதி ஆட்டத்தில் கோல் கிடைக்கவில்லை. பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் தென் கொரியா அபாரமாக ஆடியது. 59, 70, 89-வது நிமிடங்களில் அந்த அணி கோலடித்தது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 12 நாடுகளில் இதுவரை ஒரு புள்ளியைக்கூட பெறாத ஒரே அணி இந்தியாதான்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai