சுடச்சுட

    
    6spt7

    லண்டன், ஆக.5: ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்-செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் ஜோடி தங்கம் வென்றது.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் இந்த ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் ஆன்ட்ரியா-லூஸி ரடேகா ஜோடியை வீழ்த்தியது.

    ஏற்கெனவே 2000, 2008 ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் தங்கம் வென்றுள்ள இந்த ஜோடி இப்போது 3-வது முறையாக தங்கம் வென்றுள்ளது.

    இதேபோல் வீனஸ் 2000-லும், செரீனா இந்த ஒலிம்பிக்கிலும் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளனர்.

    3 வெவ்வேறு ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்கள் என்ற பெருமையையும் வில்லியம்ஸ் சகோதரிகள் பெற்றுள்ளனர்.

    ஸ்பெயினின் மார்டினெஸ் 1992, 1996, 2004 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். ஆனால் அவர் தங்கம் வென்றதில்லை. இரு வெள்ளிப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் மட்டுமே பெற்றுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai