சுடச்சுட

  
  7spt3

  பல்லகெலே, ஆக.6: இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரே இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லகெலேவில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

  இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, இருபது ஓவர் போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்போடு களமிறங்குகிறது.

  இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவது மிக முக்கியமானதாகும். இந்திய அணி பேட்டிங், பெüலிங் என இரு துறைகளிலும் வலுவானதாகவே உள்ளது.

  கம்பீர், சேவாக், கோலி, ரெய்னா, தோனி என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது இந்திய அணி.

  சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் தொடரில் பேட்டிங், பெüலிங் என இரு துறைகளிலும் இந்தியாவுக்கு பலம் சேர்த்தார் ஆல்ரவுண்டரான இர்ஃபான் பதான். அவர் இந்த ஆட்டத்திலும் இந்தியாவுக்கு பலம் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இலங்கை அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பெüலிங் என இரு துறைகளிலும் பலவீனமாகவே உள்ளது.

  இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-வது ஆட்டத்தில் மட்டும் இலங்கை வெற்றிபெற்றது. மற்ற ஆட்டங்களில் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த இலங்கை பெüலர்களால் முடியவில்லை. அதேபோல் இலங்கை பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

  இதனிடையே முக்கிய வீரரான சங்ககாரா காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் தில்ஷான் தொடர்ந்து சொற்ப ரன்களில் வெளியேறி வருகிறார். இதனால் கேப்டன் ஜெயவர்த்தனா பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

  சண்டிமாலும் மோசமாகவே விளையாடி வருகிறார். திரிமன்னே, ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  பெüலிங்கிலும் அந்த அணி மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. திசாரா பெரெராவைத் தவிர வேறு எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பந்துவீசவில்லை. மொத்தத்தில் நல்ல பார்மில் உள்ள இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது என்பது இலங்கை பெüலர்களுக்கு தலைவலியாகவே மாறியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai