சுடச்சுட

    
    7spt5

    லண்டன், ஆக.6: ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் பெலாரஸின் மேக்ஸ் மிர்ன்யி-விக்டோரியா அசரென்கா ஜோடி தங்கம் வென்றது.

    இந்த ஜோடி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றில் 2-6, 6-3, 10-8 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே-லாரா ராப்ஸன் ஜோடியை வீழ்த்தியது. முர்ரே ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    இந்த ஒலிம்பிக்கில் மட்டுமே முர்ரே இரு பதக்கங்களை வென்றுள்ளார். முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரர் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி முர்ரே தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    பிரையன் ஜோடிக்கு வெண்கலம்: வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் அமெரிக்காவின் மைக் பிரையன்-லிசா ரேமண்ட் ஜோடி 6-3, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் சபைன் லிசிக்கி-கிறிஸ்டோபர் காஸ் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai