சுடச்சுட

  
  7spt6

  லண்டன், ஆக.6: ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீரர் விகாஸ் கௌடா.

  திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவர் வட்டு எறிதல் தகுதிச்சுற்றில் 65.20 மீ. தூரம் வட்டு எறிந்ததன் மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

  இந்தப் போட்டியில் தனது முதல் வாய்ப்பில் 63.52 மீ. தூரம் வட்டு எறிந்த விகாஸ் கௌடா, இரண்டாவது வாய்ப்பில் 65.20 மீ. தூரம் வட்டு எறிந்து இறுதிச்சுற்றை உறுதி செய்தார். தான் இடம்பெற்றிருந்த ஏ பிரிவில் முதலிடத்தையும் பிடித்தார் கௌடா.

  20 பேர் இடம்பெற்றிருந்த ஏ பிரிவில் கெüடாவுக்கு அடுத்தபடியாக ஈரானின் இஷான் ஹடாடி 65.19 மீ. தூரம் வட்டு எறிந்து 2-வது இடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். ஏ, பி ஆகிய இரு பிரிவுகளில் இருந்தும் தலா 6 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர். இறுதிச்சுற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.15 மணிக்கு நடைபெறுகிறது.

  இந்த ஒலிம்பிக்கில் தட களத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 2-வது வீரர் விகாஸ் கௌடா. முன்னதாக மகளிர் வட்டு எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய கிருஷ்ணா பூனியா 7-வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 116 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் தட களப் போட்டியின் இறுதிச்சற்றுக்கு முன்னேறிய 7-வது இந்தியர் விகாஸ் கௌடா. 6-வது இந்தியர் கிருஷ்ணா பூனியா.

  முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் மில்கா சிங் (400 மீ. ஓட்டம்), குர்பஜ்ஜன் சிங் (110 மீ. தடையோட்டம்), ஸ்ரீராம் சிங் (800 மீ. ஓட்டம்), பி.டி.உஷா (400 மீ. தடையோட்டம்), அஞ்சு பாபி ஜார்ஜ் (நீளம் தாண்டுதல்) ஆகியோர் மட்டுமே இறுதிச்சுற்று வரை முன்னேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai