சுடச்சுட

  
  8spt5

  லண்டன், ஆக.7: ஒலிம்பிக் மகளிர் கம்பு ஊன்றித் தாண்டுதல் போட்டியில் அமெரிக்காவின் ஜெனிபர் சுர் 4.75 மீ. உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

  திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இப் போட்டியில் தனது முதல் வாய்ப்பில் 4.55 மீ. உயரம் தாண்டிய ஜெனிபர், அதன்பிறகு 4.75 மீ. உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். கியூபாவின் யாரிஸ்லே சில்வா, ஜெனிபருக்கு இணையாக 4.75 மீ. உயரம் தாண்டினார். ஆனாலும் அவர் தனது முதல் வாய்ப்பில் 4.45 மீ. உயரம் மட்டுமே தாண்டியதால் அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.

  உலக சாதனைக்கு சொந்தக்காரரான ரஷியாவின் எலினா இஸின்பயேவா 4.70 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். இதனால் அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். முன்னதாக 2004 ஏதென்ஸ், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் எலினா தங்கம் வென்றுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai