சுடச்சுட

  
  8spt4

  வெலிங்டன், ஆக.7: இந்தியாவுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

  அந்த அணியின் கேப்டன் டேனியல் வெட்டோரி காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ராஸ் டெய்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வெட்டோரிக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஜீத்தன் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

  நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்ட் மற்றும் 2 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 31-ம் தேதியும் தொடங்குகின்றன.

  இந்த இரு போட்டிகளும் முறையே ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் நடைபெறுகின்றன.

  முதல் இருபது ஓவர் போட்டி செப்டம்பர் 8-ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2-வது இருபது ஓவர் செப்டம்பர் 11-ம் தேதி சென்னையிலும் நடைபெறுகின்றன.

  டெஸ்ட் போட்டிக்கான அணி மட்டும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

  அணி விவரம்: ராஸ் டெய்லர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், டேனியல் ஃபிளின், ஜேம்ஸ் பிராங்க்ளின், மார்டின் கப்டில், கிறிஸ் மார்ட்டின், பிரென்டன் மெக்கல்லம், தருண் நேதுலா, ஜீத்தன் படேல், டிம் செüதி, குரூகர் வான் விக், நீல் வாக்னெர், வாட்லிங், கேன் வில்லியம்சன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai