சுடச்சுட

  
  8spt8

  லண்டன், ஆக.7: ஒலிம்பிக் ஆடவர் 75 கிலோ மிடில் வெயிட் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் தோல்வி கண்டார்.

  செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் விஜேந்தர் சிங் 13-17 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்பாஸ் அடீவிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டத்தின் முதல் சுற்றில் மிகவும் கவனமாக விளையாடினார் விஜேந்தர் சிங். இருப்பினும் முதல் சுற்றின் முடிவில் இருவரும் 3-3 என்ற கணக்கில் சமநிலை பெற்றனர். ஆனால் இரண்டாவது சுற்றில் அபாரமாக ஆடிய அப்பாஸ், அந்த சுற்றை 7-5 என்ற கணக்கில் தன்வசமாக்கினார்.

  பின்னர் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசிச் சுற்றில் விஜேந்தர் சிறப்பாக செயல்பட்டாலும், அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அப்பாஸ் விளையாடினார். இறுதியில் அப்பாஸ் 17-13 என்ற கணக்கில் விஜேந்தரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியதோடு பதக்கத்தையும் உறுதி செய்தார்.

  பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங், இந்த முறையும் பதக்கம் வெல்வார் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் ஆட்டம் காலிறுதியோடு முடிவுக்கு வந்துவிட்டது.

  ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவில் இருந்து ஆடவர் பிரிவில் 7 பேர், மகளிர் பிரிவில் மேரி கோம் என மொத்தம் 8 பேர் பங்கேற்றுள்ளனர். அதில் மேரி கோம் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறி, பதக்கத்தை உறுதி செய்துள்ளார். தேவேந்திரோ சிங் புதன்கிழமை நடைபெறும் காலிறுதியில் அயர்லாந்தின் பேடி பர்னெûஸ சந்திக்கவுள்ளார்.

  மற்ற வீரர்களில் சிவ தாபா, சுமித் சங்வான் ஆகியோர் முதல் சுற்றிலும், ஜெய் பகவான், மனோஜ் குமார், விகாஸ் கிருஷன் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும், விஜேந்தர் சிங் காலிறுதியிலும் தோல்வி கண்டு வெறுங்கையோடு திரும்பியுள்ளனர். இவர்களில் சுமித் சங்வான், மனோஜ் குமார், விகாஸ் கிருஷன் ஆகியோர் நடுவர்களின் பாரபட்சமான தீர்ப்புகளால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai