சுடச்சுட

    

    துபை, ஆக.7: சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் சச்சின், ஜாகீர்கான் ஆகியோர் தொடர்ந்து 12-வது இடத்தில் உள்ளனர்.

    பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர்களில் சச்சின் மட்டுமே முதல் இருபது இடங்களுக்குள் உள்ளார். இலங்கையின் சங்ககாரா முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் காலிஸ், ஆம்லா ஆகியோர் முறையே 2 மற்றும் 3-வது இடங்களிலும் உள்ளனர்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் 7 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    பௌலர்கள் தரவரிசையில் இந்திய வீரர்களில் ஜாகீர்கான் 12-வது இடத்திலும், பிரக்யான் ஓஜா 20-வது இடத்திலும் உள்ளனர். வேறு யாரும் முதல் இருபது இடங்களுக்குள் இல்லை. தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் முதலிடத்திலும், பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் வெர்னான் பிலாண்டர் 3-வது இடத்திலும் உள்ளனர். பிலாண்டருக்கு இதுதான் அதிகபட்ச தரவரிசையாகும்.

    சிக்கலில் இங்கிலாந்து: இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ தென் ஆப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்துவிடும். இந்தப் போட்டியில் வென்றால் ஒழிய இங்கிலாந்து முதலிடத்தைத் தக்கவைக்க முடியாது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai