சுடச்சுட

    
    8spt7

    லண்டன், ஆக.7: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் முன்னேறியுள்ளன.

    செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதியை உறுதி செய்துள்ளது.

    ஆஸ்திரேலியாவின் அபார ஆட்டத்திற்கு பாகிஸ்தான் வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. பாகிஸ்தான் வீரர்கள், கடைசி வரை ஒரு கோல்கூட அடிக்காதபோதும், 7 கோல்களை வாங்கி தோல்வி கண்டனர்.

    லீக் சுற்றில் 5 ஆட்டங்களில் விளையாடிய ஆஸ்திரேலியா 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. பிரிட்டன் மற்றும் ஆர்ஜென்டீனாவுடன் டிரா செய்தது. இதன்மூலம் 11 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.

    நெதர்லாந்து வெற்றி: "பி' பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 4-2 என்ற கணக்கில் கொரியாவை வீழ்த்தியது.

    இதன்மூலம் நெதர்லாந்து அணி தான் விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டது. இதனால் 15 புள்ளிகளுடன் "பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்ததோடு, அரையிறுதிக்கும் முன்னேறியது நெதர்லாந்து.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai