சுடச்சுட

  
  8spt9

  லண்டன், ஆக.7: ஒலிம்பிக் ஆடவர் 100 மீ. தடையோட்ட போட்டியின்போது முன்னாள் உலக சாதனையாளரான சீனாவின் லியூ ஜியாங் கீழே விழுந்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் பங்கேற்ற 29 வயதான லியூ, முதல் தடையைத் தாண்டும்போது அவரது இடது கால் தடை மீது மோதியதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதன்பிறகு அவர் அங்கிருந்து சக்கர நாற்காலி மூலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

  கடந்த சில மாதங்களாக கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், முழுமையாக மீண்ட பிறகு இப் போட்டியில் பங்கேற்றார்.

  2004-ல் ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இதே பிரிவில் தங்கம் வென்ற லியூ, 2008-ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற போட்டியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

  இதனால் சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் லியூ.

  எப்படியும் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு களமிறங்கிய லியூ ஜியாங்குக்கு கடந்த போட்டியைப் போலவே, இந்தப் போட்டியும் சோதனையாகவே அமைந்துவிட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai