சுடச்சுட

  
  8spt6

  லண்டன், ஆக.7: ஒலிம்பிக் ஆடவர் மும்முறைத் தாண்டுதல் தகுதிச் சுற்றிலேயே தோல்வி கண்டார் இந்திய வீரர் ரஞ்சித் மகேஸ்வரி.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றில் 3 வாய்ப்புகளிலும் அவர் தவறு (பெüல்) செய்தார். இதனால் எவ்வித புள்ளிகளுமின்றி தான் இடம்பெற்றிருந்த ஏ பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். ஏ, பி என இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 27 பேர் பங்கேற்ற இப்போட்டியில் 12 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

  ஏ பிரிவில் 17.06 மீ. தூரம் தாண்டிய பிரான்ஸின் பெஞ்சமின் முதலிடத்தைப் பிடித்தார். பி பிரிவில் அமெரிக்காவின் கிறிஸ்டியான் டெய்லர் 17.21 மீ. தூரம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். ரஞ்சித் மகேஸ்வரி தமிழகத்தின் சார்பில் தட கள போட்டிகளில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்தியாவில் இருந்து 14 பேர் ஒலிம்பிக் தட கள போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில் விகாஸ் கெüடா மட்டும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 9 பேர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறிவிட்டனர். 4 பேர் இனிதான் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai