சுடச்சுட

    
    spt5

    லண்டன், ஆக.8: ஒலிம்பிக் மகளிர் 800 மீ. ஓட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் தின்டு லூக்கா.

     புதன்கிழமை நடைபெற்ற மகளிர் 800 மீ. தகுதிச்சுற்றில் "பி' பிரிவில் இடம்பெற்றிருந்த தின்டு லூக்கா 2 நிமிடம் 1 விநாடி, 75 மைக்ரோ விநாடிகளில் இலக்கைக் கடந்து 3-வது இடத்தைப் பிடித்தார்.

     இதன்மூலம் அவர் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

     மொத்தமுள்ள 6 பிரிவுகளில் இருந்து தலா 3 பேர் என மொத்தம் 18 பேர் அரையிறுதிக்கு நேரடியாக தகுதிபெற்றனர். மேலும் 6 பேர் குறைந்தபட்ச நேரத்தில் இலக்கை எட்டியதன் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.

     வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் 24 பேர் பங்கேற்கிறார்கள். இதில் இருந்து 8 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறுவார்கள்.

     தட களத்தில் இந்தியாவில் இருந்து 14 பேர் பங்கேற்றாலும், தின்டு லூக்கா, சஹானா குமாரி (உயரம் தாண்டுதல்) ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் தோல்வி கண்டு வெளியேறிவிட்டனர். சஹானா குமாரி வியாழக்கிழமை களமிறங்குகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai