சுடச்சுட

    
    spt3

    லண்டன், ஆக.8: ஒலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் ரஷிய வீரர் இவான் உகோவ் தங்கம் வென்றார்.

     செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் இவான் 2.38 மீ. உயரம் தாண்டி தங்கத்தைத் தட்டிச் சென்றார். அமெரிக்காவின் எரிக் கினார்ட் 2.33 மீ. உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

     கத்தாரின் முடாஷ் இசா, கனடாவின் டெரீக் டிரெüயின், பிரிட்டனின் ராபி கிராபர்ஸ் ஆகியோர் 2.33 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai