சுடச்சுட

  

  புது தில்லி, ஆக.8: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மக்களவையில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

   இது தொடர்பாகப் பேசிய மக்களவைத் தலைவர் மீரா குமார், "ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ககன் நரங், விஜய் குமார், சாய்னா நெவால் ஆகியோர் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

   அவர்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

   இதில் என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்களும் இணைவீர்கள் என்று நம்புகிறேன்.

   ஒலிம்பிக்கில் இவர்கள் வென்றுள்ள பதக்கங்கள், நாடு முழுவதும் உள்ள இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமையும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai