சுடச்சுட

  
  spt10

   புணே, ஆக:8: ஒலிம்பிக்கில் நான் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது தாயாரின் விருப்பம். அதை எதிர்காலத்தில் நிறைவேற்றுவேன் என்றார் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங்.

   லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ககன் நரங், செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்பினார். மகாராஷ்டிர அரசின் சார்பில் அவருக்கு புணேவில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது அவர் கூறியது: ஒலிம்பிக்கில் நான் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்று எனது தாயார் விரும்பினார். இந்த முறை வெண்கலம் வென்றாலும், எதிர்காலத்தில் அவரது ஆசையை நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன். இந்தியா விளையாட்டில் ஏன் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பதற்கு எந்தக் காரணமும் கிடையாது.

   விளையாட்டில் படிப்படியாகத்தான் முன்னேற முடியும். விளையாட்டு கலாசாரத்தை பள்ளிகளில் இருந்து வளர்க்க வேண்டும். மாணவர்களுக்கு விளையாட்டுக்காக தனி மதிப்பெண்கள் வழங்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலையை உறுதி செய்ய வேண்டும். துப்பாக்கி சுடுதலைப் பொருத்தவரையில் இளம் வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதலும், போதிய ஆதரவும் இருந்தால் இந்தியா வெற்றிகளைக் குவிக்க முடியும் என்றார். முன்னதாக விமான நிலையத்தில் வந்திறங்கிய ககன் நரங்குக்கு மாலை, மரியாதையுடன் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai