சுடச்சுட

  
  spt2

  லண்டன், ஆக.8: ஒலிம்பிக் மகளிர் 100 மீ. தடையோட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை சாலி பியர்சன் தங்கம் வென்றார்.

   செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இப் போட்டியில் பியர்சன் 12.35 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான அமெரிக்காவின் டான் ஹார்பர் 12.37 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அமெரிக்காவின் மற்றொரு வீராங்கனையான கெல்லி வெல்ஸ் 12.48 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai