சுடச்சுட

  
  spt8

  லண்டன், ஆக.8: ஒலிம்பிக் ஆடவர் வட்டு எறிதல் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கெளடா 8-வது இடத்தைப் பிடித்து, ஏமாற்றமடைந்தார்.

   செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் விகாஸ் அதிகபட்சமாக 64.79 மீ. தூரம் வட்டு எறிந்தார். இப் போட்டியின் தகுதிச்சுற்றில் 65.20 மீ. தூரம் வட்டு எறிந்த விகாஸ் கெளடா, இறுதிச்சுற்றில் 64.79 மீ. தூரம் மட்டுமே வட்டு எறிந்து தோல்வி கண்டார்.

   போட்டி நடைபெற்றபோது அங்கு நிலவிய கடும் குளிரும், அவ்வப்போது பெய்த சாரல் மழையும் கெüடாவுக்கு பாதகமாக அமைந்தது. முதல் வாய்ப்பில் 64.79 மீ. தூரம் எறிந்த விகாஸ் கௌடா, அதன்பிறகு கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் முதல் வாய்ப்பைவிட குறைவான தூரமே வட்டு எறிந்தார். 2-வது வாய்ப்பில் 60.95 மீ., மூன்றாவது வாய்ப்பில் 63.03 மீ., 4-வது வாய்ப்பில் 64.15 மீ., 5-வது வாய்ப்பில் 64.48 மீ., 6-வது வாய்ப்பில் 63.89 மீ. தூரமும் வட்டு எறிந்தார் கெüடா. இது அவருக்கு பின்னடைவாக அமைந்தது.

   இந்தப் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனியின் ராபர்ட் ஹர்ட்டிங் 68.27 மீ. தூரம் வட்டு எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஈரானின் இஷான் ஹடாடி 68.18 மீ. தூரம் வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கமும், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான எஸ்தோனியாவின் ஜெர்டு கன்டெர் 68.03மீ. தூரம் வட்டு எறிந்து வெண்கலமும் வென்றனர். மொத்தம் 12 பேர் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.

   தகுதிச்சுற்றில் தான் இடம்பெற்றிருந்த "ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய கெüடாவுக்கு, இறுதிச்சுற்று மிக மோசமானதாக அமைந்தது. கெüடாவும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்டிருப்பதன் மூலம் தட களத்தில் இந்தியா இதுவரை பதக்கம் வென்றதில்லை என்ற குறை இப்போதும் தொடர்கிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai