சுடச்சுட

  
  1spt6

  ராஞ்சி, ஆக.9: போட்டி நடைபெற்றபோது வீரர்கள் மீது குற்றம்சாட்டிய இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மைக்கேல் நாப்ஸை உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மைக்கேல் கின்டோ வலியுறுத்தியுள்ளார்.

   ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய இந்திய அணி முதல் 3 லீக் ஆட்டங்களில் தோற்றபோது, அது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பயிற்சியாளர் நாப்ஸ், இந்திய வீரர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாததே தோல்விக்குக் காரணம் என்று விமர்சித்தார். அதன்பிறகு நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வி கண்டு "பி' பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்தது.

   இந்த நிலையில் 1972-ல் மியூனிச் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணி, 1975-ல் உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி ஆகியவற்றில் இடம்பெற்றிருந்தவரான மைக்கேல் கின்டோ இதுதொடர்பாக கூறியிருப்பது:

   போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே வீரர்கள் மீது குறைகூறி நாப்ஸ் விமர்சனம் செய்தது சரியானதல்ல, அதற்காக வீரர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

   பயிற்சியாளர் பதவியில் இருப்பவர், வீரர்களுக்கு ஊக்கமளிப்பவராகவும், முந்தைய ஆட்டங்களில் கண்ட தோல்வியை மறக்கச் செய்து அடுத்த ஆட்டத்துக்கு அவர்களை தயார்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். அதைவிட்டு மைக்கேல் நாப்ஸ் வீரர்களை விமர்சித்துள்ளார். எனவே அவரைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். ஹாக்கியில் ஒரு காலத்தில் மிக வலுவான அணியாக இருந்த இந்திய அணி, கடைசி 2 இடத்துக்கான போட்டியில் விளையாடுவதைப் பார்ப்பது எவ்வளவு மோசமானது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு இதுதான். ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணி இப்போது கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

   உலக ஹாக்கித் தொடரில் விளையாடினார்கள் என்பதற்காக சில நல்ல வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கியது ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

   வீரர்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இந்திய அணியை மீண்டும் பலமான அணியாக்கும் வகையிலும் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஹாக்கி இந்தியா மற்றும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு ஆகியவை ஒரே அமைப்பாக உடனடியாக இணைக்கப்பட வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai