சுடச்சுட

  
  1spt2

   லண்டன், ஆக.9: ஒலிம்பிக் ஆடவர் 49 கிலோ லைட் ஃபிளை எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங் தோல்வி கண்டார்.

   புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தேவேந்திரோ சிங் 18-23 என்ற புள்ளிகள் கணக்கில் அயர்லாந்தின் பேடி பர்னெஸ்ஸிடம் தோல்வி கண்டார்.

   இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே இருவரும் அபாரமாக ஆடினார். இதனால் இருவரும் மாறிமாறி அதிரடி குத்துகளை விட்டனர். இருப்பினும் முதல் சுற்றின் முடிவில் பேடி பர்னெஸ் 7-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

   இரண்டாவது சுற்றில் தேவேந்திரோ சிங் கடுமையாகப் போராடியபோதும் பர்னெஸின் முன்னிலையை தடுக்க முடியவில்லை. இந்த சுற்றை பர்னெஸ் 10-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் இரு சுற்றுகளின் முடிவில் பர்னெஸ் 17-10 என்ற கணக்கில் முன்னிலை கண்டார்.

   பின்னர் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசிச் சுற்றில் தோல்வியைத் தவிர்க்க தேவேந்திரோ சிங் கடுமையாகப் போராடினார். அதிரடியான தாக்குதல்களை தொடுத்தபோதும் அந்த சுற்றிலும் பர்னெஸ்ஸின் முன்னிலையை தடுக்க முடியவில்லை. இறுதியில் அந்த சுற்று 8-6 என்ற கணக்கில் பர்னெஸ் வசமானது. இதன்மூலம் பர்னெஸ் 23-18 என்ற புள்ளிகள் கணக்கில் தேவேந்திரோ சிங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் அவர் பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார்.

   வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் சீனாவின் ஜெü சிமிங்கை சந்திக்கிறார் பேடி பர்னெஸ். முன்னதாக ஜௌ சிமிங் தனது காலிறுதி ஆட்டத்தில் 13-10 என்ற கணக்கில் கஜகஸ்தானின் பிர்ஸôன் ஜேகிபோவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

   தேவேந்திரோ சிங்கோடு ஒலிம்பிக்கில் இந்திய குத்துசண்டை வீரர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா சார்பில் ஆடவர் 7 பேரும், மகளிர் பிரிவில் மேரி கோமும் பங்கேற்றனர். குத்துச்சண்டை மூலம் இந்தியாவுக்கு கணிசமான பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேரி கோம் மட்டுமே வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

   ஆடவர் பிரிவில் சுமித் சங்வான், விகாஸ் கிருஷன், மனோஜ் குமார், தேவேந்திரோ சிங் ஆகியோர் போட்டி நடுவர்களின் பாரபட்சமான தீர்ப்பால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான விஜேந்தர் சிங் காலிறுதியோடு வெளியேறினார்.

   மொத்தத்தில் 8 பேர் பங்கேற்ற இப் போட்டியில் ஆடவர் பிரிவில் பதக்கம் இல்லையென்றாலும், மகளிர் பிரிவில் பங்கேற்ற மேரி கோம், வெண்கலத்தை வென்று ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai