சுடச்சுட

  

  கூடைப்பந்து: அரையிறுதியில் அமெரிக்கா, ஸ்பெயின், ரஷியா, ஆர்ஜென்டீனா

  Published on : 26th September 2012 11:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  1spt4

  லண்டன்,ஆக.9: ஒலிம்பிக் ஆடவர் கூடைப்பந்து போட்டியின் அரையிறுதிக்கு அமெரிக்கா, ஸ்பெயின், ரஷியா, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

   சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் அமெரிக்கா, ஆர்ஜென்டீனாவையும், ஸ்பெயின் அணி, ரஷியாவையும் சந்திக்கின்றன.

   புதன்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்கா 119-86 என்ற புள்ளிகள் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றை உறுதி செய்தது. இதேபோல் 2004-ல் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஆர்ஜென்டீனா தனது காலிறுதிச் சுற்றில் 82-77 என்ற புள்ளிகள் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

   முன்னதாக 2004 ஒலிம்பிக் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவை வீழ்த்திய ஆர்ஜென்டீனா, 2008 ஒலிம்பிக் அரையிறுதியில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டது. இந்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இவ்விரு அணிகளும் அரையிறுதியில் மோதவுள்ளன.

   இதேபோல் ஸ்பெயின் அணி 66-59 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்ûஸயும், ரஷியா 83-74 என்ற கணக்கில் லிதுவேனியாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. சோவியத் யூனியனில் இருந்தபோது ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டியில் ரஷியா பதக்கம் வென்றது. அதன்பிறகு இதுவரை பதக்கம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai