சுடச்சுட

  

  காலிறுதியில் தேவேந்திரோ சிங்கும், பேடி பர்னெஸ்ஸýம் மோதியபோது பர்னெஸ்ஸýக்கு சாதகமாவே போட்டி நடுவர் செயல்பட்டார் என்று இந்திய பயிற்சியாளர் பி.ஐ.பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

   இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: எங்களுடைய வீரர்களுக்கு எதிராக போட்டி நடுவர்கள் மீது ஏராளமான தவறுகளை செய்தனர். பர்னெஸ் சரியான முறையில் தேவேந்திரோ சிங் மீது தாக்குதல் தொடுக்காதபோதும் அவருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. இது நியாயமற்றதாகும்.

   போட்டி நடுவர்கள் மிக மோசமாக நடந்து கொண்டனர். தேவேந்திரோ சிங் விஷயத்தில் மட்டுமல்லாது, இந்திய வீரர்கள் அனைவருக்கு எதிராகவும் இதுபோன்றுதான் நடுவர்கள் செயல்பட்டனர். இது மிக மோசமான விஷயம். இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வதற்கு தகுதியானவர்கள் என்றார்.

   தேசிய பயிற்சியாளரான குர்பாக்ஸ் சிங் சாந்து கூறுகையில், "போட்டி நடுவரின் தீர்ப்பால் தேவேந்திரோ சிங் பாதிக்கப்பட்டுள்ளார். சில நேரங்களில் நடுவர் ரசிகர்கள் கூட்டத்தின் அருகே சென்றுவிட்டு வந்து புள்ளிகளை வழங்கினார். அவர் தனது சொந்த மூளையைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு மேல் இந்த விஷயத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. இந்திய வீரர்களின் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் நிறைய பதக்கங்களை வெல்லாதது வருத்தமளிக்கிறது. வெண்கலம் வென்ற பெருமை சேர்த்த மேரி கோமுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்' என்றார்.

   தேவேந்திரோ சிங்கின் ஆட்டம் குறித்துப் பேசிய சாந்து, "அவர் மிக அற்புதமாக விளையாடினார். இருப்பினும் துரதிருஷ்டவசமாக அவரால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai