Enable Javscript for better performance
மகளிர் கால்பந்து: கனடாவுக்கு வெண்கலம்- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் கால்பந்து: கனடாவுக்கு வெண்கலம்

    Published on : 26th September 2012 11:14 AM  |   அ+அ அ-   |    |  

    இங்கிலாந்து, ஆக.9: ஒலிம்பிக் மகளிர் கால்பந்து போட்டியில் கனடா வெண்கலம் வென்றது.

     வியாழக்கிழமை நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கனடா 1-0 என்ற கணக்கில் பிரான்ûஸ வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.

     ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கனடாவின் டயானா கோலடிக்க, அதுவே கனடாவின் வெற்றிக் கோலானது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை.

     இதன்பிறகு நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் 2-வது பாதி ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் பிரான்ஸ் வசமே பந்து இருந்தது. அந்த அணிக்கு அவ்வப்போது கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், நூலிழையில் கோல் நழுவியது.

     ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கனடாவின் டாயானா மேத்ஸன் கோலடித்தார். இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் வெற்றி கண்டு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது கனடா.

     

    kattana sevai