சுடச்சுட

    
    1spt5

    லண்டன், ஆக.9: ஒலிம்பிக் மகளிர் 55 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை கீதா போகத் தோல்வி கண்டார்.

     இருப்பினும் அவர் "ரெபிசேஜ்' சுற்றின் மூலம் வெணகலப் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

     வியாழக்கிழமை மாலை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கீதா போகத் 1-3 என்ற கணக்கில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கனடா வீராங்கனை டோன்யா வீர்பீக்கிடம் தோல்வி கண்டார்.

     இந்த ஆட்டத்தில் கீதா போகத் தோல்வி கண்டாலும், "ரெபிசேஜ்' (பதக்கம் வெல்வதற்கான மற்றொரு வாய்ப்பு) என்ற சுற்றின் மூலம் அவர் வெண்கலப் பதக்கம் வெல்ல முடியும். "ரெபிசேஜ்' சுற்றின் முதல் சுற்றில் கீதா போகத், உக்ரைனின் லஸôரோவாவை சந்திக்கிறார்.

     இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் கொலம்பியாவின் காஸ்டிலோவை சந்திப்பார் கீதா போகத். அதில் அவர் வெற்றிபெறும் பட்சத்தில் வெண்கலப் பதக்கம் வெல்வார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai